Friday, February 3, 2012

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை பிரித்தாள நடுவணரசு முயல்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியை, கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டைப் பனகல் மாளிகை முன்பு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அணுஉலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களைச் சாதி மதங்களின் பெயரால் பிரித்துவிட நடுவணரசு முயல்வதாக குற்றம் சாட்டிய சீமான். அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்கம், காஞ்சிபுரம் மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புககளைச் சேர்ந்தவர்கள் உட்பட  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Wednesday, February 1, 2012

போராட்டக்குழு மீது தாக்குதல்

கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, அணு உலையை இயங்கச் செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது