Sunday, January 29, 2012

இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி காணொளி இணைப்பு

சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த ,லங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கறுப்புக் கொடி காட்டினர்.
அவர்களை தடுத்த காவல்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். ,தனால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் ராஜபக்சேவின் மைத்துனருக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தநிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது

பாரதிராஜாவும் அப்துல்கலாமும் பச்சை துரோகிகள்-மு.களஞ்சியம்

பாரதிராஜாவும் அப்துல்கலாமும் பச்சை துரோகிகள்-மு.களஞ்சியம்

Saturday, January 28, 2012

நியூட்டிரினோ ஆய்வு பற்றி செந்தமிழன் சீமான்

நியூட்டிரினோ ஆய்வு பற்றி செந்தமிழன் சீமான்

பச்சைதுரோகி ப.சிதம்பரத்திற்க்கு கூட ஆதரவு மொழி கூறும் எம் இன தளபதி செந்தமிழன் சீமான்

பச்சைதுரோகி ப.சிதம்பரத்திற்க்கு கூட ஆதரவு மொழி கூறும் எம் இன தளபதி செந்தமிழன் சீமான்

அணு மின்நிலையம் பற்றி செந்தமிழன் சீமான்

அணு மின்நிலையம் பற்றி செந்தமிழன் சீமான்

தமிழ்நாட்டில் உள்ள மின்சாரப்பிரச்சனை பற்றி செந்தமிழன் சீமான்

தமிழ்நாட்டில் உள்ள மின்சாரப்பிரச்சனை பற்றி செந்தமிழன் சீமான்

தமிழகத்தின் நிர்வாகத்தை பற்றி செந்தமிழன் சீமான்

தமிழகத்தின் நிர்வாகத்தை பற்றி செந்தமிழன் சீமான்

வலிமையான அரசியல் பற்றி செந்தமிழன் சீமான்

வலிமையான அரசியல் பற்றி செந்தமிழன் சீமான்

வரலாற்றை பேசுவது படிப்பினை-சீமான்

வரலாற்றை பேசுவது படிப்பினை-சீமான்

தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழித்தது சினிமா தமிழனின் விளையாட்டை அழித்தது கிரிக்கெட் எனும் மட்டை பந்து-செந்தமிழன் சீமான் ஆவேசம்

Friday, January 27, 2012

அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி

அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி


தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத் தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து
வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே.


தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர்.அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும்.அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.


தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களின் பிள்ளைகளே அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வரு்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றே செவிலியர் பணிக்குத் தகுதியுடையவர்களாகின்றனர். இந்த சூழலில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்புகளை வழங்காமல், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்து தேர்ந்துவரும் செவிலியர்களுக்கு இணையாக வாய்ப்பு அளிப்பது என்பதும், தேர்வு நடத்தி பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் நியாயமான நடவடிக்கையல்ல. அப்படியானால் அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் செவிலியர்களின் தகுதி ஐயத்திற்குரியதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.


நமது அண்டை மாநிலங்கள் அனைத்திலும் அரசுக் கல்லூரிகளில் படித்துத் தேர்ந்த மண்ணின் மைந்தர்களு்க்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அந்த எண்ணம் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லையே ஏன்?


எனவே தமிழக அரசுப் பணிகளில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பணிப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், பணி சேர்க்கைக்கு போட்டித் தேர்வு கூடாது என்கிற அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம்தமிழர் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
                                                                       நன்றி
                                                            பாக்கியராசன்.சே
http://www.facebook.com/peekaas  

இனப்படுகொலை செய்த இலங்கைக்கு அப்துல்கலாம் சென்றிருப்பதற்கு சீமான் கண்டனம்.

இனப்படுகொலை செய்த இலங்கைக்கு அப்துல்கலாம் சென்றிருப்பது, அவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கும் விதமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் ராமேஸ்வரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர் அமீர் இன்று நீதிமன்றத்தில் நேர்நின்றனர்.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடத்தினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைப்பட இயக்குனர் அமீர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில்; இருவரும் நீதிமன்றத்தில் நேர்நின்றனர். பிற செய்தியாளர்களை சந்தித்த சீமான்,  ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என்றும், இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு என்றும் தெரிவித்த அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை சென்று ராஜபக்ஷவோடு கைகுலுக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றபோது எவ்வித கருத்தும் தெரிவிக்காத அப்துல்கலாம் இப்போது இலங்கை சென்றிருப்பது பயனற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை - நாம்தமிழர்


சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை - நாம்தமிழர்

நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமு ம் நடைபெற்றது

Tuesday, January 24, 2012

தலைமன்னார் அருகே, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளன. கச்சத்தீவு அருகே, அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,இலங்கை கடற்படைக் கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர், கல், கட்டைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தலைமன்னார் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் நான்கு படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், ஒரு படகு சேதமடைந்ததாகவும் ஒரு மீனவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sunday, January 22, 2012

பெங்களூரில் செந்தமிழன் சீமான் உரை

பெங்களூரில் செந்தமிழன் சீமான் உரை

மொழிப்போர் ஈகிகள் நாள்

                                           மொழிப்போர் ஈகிகள் நாள்
                                                   இடம்-சிதம்பரம்
                                                    நாள்-25.01.2012

திரளுவோம் திரளுவோம் பகைமிரள திரளுவோம் பைந்தமிழ் இனத்தீரே!

இலங்கை- இந்தியா கூட்டிணைந்து தமிழர்களை ஏமாற்ற முயற்சி - சீமாண் கண்டனம்




இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து, தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உறுதியளித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியிருப்பது ஈழத்தமிழர்களை ஏமாற்றும் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர்களுக்காண இன படுகொலை போரை நடத்தி ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசின் அதிபர் இராஜபக்சேவிடமே தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்துவதும், அதற்கு செவி சாய்ப்பது போல் இராஜபக்சேவும், இலங்கை அரசமைப்பு சட்டத்தில் 13-வது சட்டத்திருத்தத்திற்குச் சென்று தீர்வு அளிக்கப்போவதாக கூறுவதும், உலக நாடுகளை ஏமாற்ற இந்திய-இலங்கை அரசு இணைந்து அரங்கேற்றி வரும் கபட நாடகம் என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இனப்படுகொலை தொடர்பாக இராஜபக்சேவையும், இலங்கை அரசையும், பன்னாட்டு மனித உரிமை நீதிமன்றத்தில் நிறுத்த, பன்னாட்டு விசாரணை குழு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வரும் நிலையில் இரண்டு நாடுகளும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்  என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் இந்திய அரசை நம்பி தமிழர்கள் ஏமார்ந்துவிடக்கூடாது என்று சீமான் எச்சரித்துள்ளார்.

Friday, January 20, 2012

Thursday, January 19, 2012

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.செந்தமிழன் சீமானின் சிறப்புரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சீமானின் சொந்த ஊரான அரணையூரில் 16.01.12 அன்று பொங்கல் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பாக மிக சிறப்பாக நடை பெற்றது.மாபெரும் கபடி போட்டி,பாரம்பரிய இசை,கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டம் நடை பெற்றது.

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. "வீரத்தமிழர் விளையாட்டு! வென்று மானத்தை நிலைநாட்டு!" என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. "கலையை மீட்பதும் கலைஞனை காப்பதும் நமது கடமை" என்ற முழக்கத்தோடு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.செந்தமிழன் சீமானின் சிறப்புரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Wednesday, January 18, 2012

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! - ஜூனியர் விகடன்


புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழ்ஈழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், ‘ஐ ஹேவ் ட்ரீம்’ என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திரிகோண மலையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியானது. கனடாவில், ‘தமிழ் இனப் படுகொலை’ என்ற குறியீட்டுடன் தபால் தலை வெளியானது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட்டு, மீண்டும் இலங்கைக்குக் கலக்கத்தை உண்டாக்கி இருக் கிறார்கள், ஈழத் தமிழர்கள்.‘விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்… சுதந்திரத் தமிழ் ஈழப் போராட்டம் முடிந்தேபோனது’ என்று சிங்களர்கள் கொக்கரித்தாலும்… புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா-வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்ஷேவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

”எப்படி இது சாத்தியமானது?” என்று,  இங்கிலாந்தில் தபால் தலையைக் கொண்டு வந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். இவர், 2009-ம் ஆண்டு ஈழப்போரின்போது லண்டனில் உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத் தையும் ஈர்த்தவர். ”ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டத்தின் வளர்ந்த பல நாடுகளில், அந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில், அவர்களுக்கு விருப்பமான தபால்தலையை வெளியிட அனுமதி உள்ளது. அந்த விதிமுறைகளின்படியே நான், எங்களது தேசியத் தலைவர் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட முயற்சி எடுத்தேன். இதற்காக முதலில் ‘ராயல் மெயில்’ என்ற இங்கிலாந்து தபால் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். நமது கோரிக்கையை அவர்கள் நியாயமானது என்று கருதி ஏற்றுக்கொண்டால் மட்டுமே தபால்தலை வெளியிட அனுமதி கொடுப்பார்கள். பிரபாகரனின் தபால்தலை வெளியிட நான் விடுத்த விண்ணப்பத்தை ராயல் மெயில் ஏற்றுக்கொண்டு, முதல் தரத் தபால்தலையாக வெளியிட்டது.

இந்தத் தபால்தலையை உபயோகித்து, அனைத்து வெளிநாடுகளுக்கும் தபால் அனுப்ப முடியும். இது எங்களுடைய தமிழ் மக்களின் வெற்றி… எங்கள் நாடு விடுதலை அடையும் வரை எங்கள் போராட்டம் பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார் நம்பிக்கையோடு.

பிரபாகரன் தபால்தலை வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, தமிழ் ஈழக்கொடி, மலர் என்று 11 தமிழீழச் சின்னங்களை தாங்கிய தபால் தலைகள் பிரான்ஸில் வெளியாகி இருக்கின்றன.

‘முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல…’ என்ற கவிஞர் காசிஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது!


நன்றி : ஜூனியர் விகடன் 

Tuesday, January 17, 2012

மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் – காணொளிகள் இணைப்பு!!!!

மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அதன் பின் நாம் தமிழர்கள் சிலர் மலையாள கடையான முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அடித்து நொறுக்கினர். பின்பு அவர்களே காவல் துறையிடம் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்திய பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YjzuDBXR7qs

சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளன்போடு வேண்டுகோள் விடுக்கிறது.



ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது:
                                நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது.

கடந்த 8ஆம் தேதி பம்பையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வென்னீர் ஊற்றியதால் இடுப்பிலும், முதுகிலும் ஏற்பட்ட கடுமையானத் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தவேலுவின் உடல் நிலை
மோசமானதையடுத்து, அவரது மனைவியும் உறவினர்களும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், திங்கட்கிழமை சாந்தவேலு உயிரிந்துள்ளார்.

முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற சாந்தவேலு, அங்கிருந்த தேநீர் கடைக்காரருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் விளைவாகவே கடைக்காரர் உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கினார்கள் என்பதையும், அப்போது
கடைக்காரர் கொதிக்கும் வென்னீரை தன் மீது ஊற்றியதாகவும் கோட்டயம் மருத்துவமனையில் தன்னை வந்த பார்த்த மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மகரசோதியை முன்னிட்டு சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பம்பையில் குவிந்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசும், அதன் முதலமைச்சர் உம்மண் சாண்டியும் கூறிய நிலையில், அங்கு காவலர்கள் யாரும் வந்து தகராறைத் தடுக்காத்தும், அந்தச் சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாததும் ஏன்?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக கேரளத்து அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிராக கிளப்பிவிடும் பொய்ப் பரப்புரையின் காரணமாக பதற்றம் நிலவிவரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. கேரளத்தில் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சியாகும்.

சாந்தவேலுவை தன்னோடு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமி தன் குழுவினருடன், தகராறு நடந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவரது மனைவி தமிழக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் மீது தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி முழுமையான புலனாய்வு செய்து, சந்தவேலுவைக் கொன்ற மலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்குப் பின் ஐயப்ப பக்தர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். அது இப்போது ஒரு கொலையில் முடிந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னரும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குத்
தமிழ் பக்தர்கள் செல்ல வேண்டுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

கோயில்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் எல்லா கடவுள்களுக்கும் ஆலயங்கள் உள்ளதே. தமிழ்க் கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளைத் தாண்டி புனிதத் தலம் வேறு என்ன வேண்டும்?

தமிழனை எவ்வளவு அடித்தாலும் அவன் சபரிமலைக்கு வருவான் என்ற எண்ணம் காரணமாகவே, சபரிமலை பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படாததும், அதன் காரணமாகவே கடந்த ஆண்டு புல்மோட்டில் விபத்தும் ஏற்பட்டது. போதுமான தூய்மைச் சூழலற்ற நிலையிலேயே சபரிமலை யாத்திரைக்கு தமிழர்கள் சென்று
வருகின்றனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் அங்கு சென்று வருவதால்தான் இன்றைக்கு ஒரு ஐயப்ப பக்தர் இப்படி கொடூரமான கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள்
புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளன்போடு வேண்டுகோள் விடுக்கிறது.

Friday, January 13, 2012

டாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை

டாம் 999 மத்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்கிற கேரள அரசின் நிலைப்பாட்டை
மையமாக வைத்து கேரள அரசின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட டாம் 999
திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்துள்ள
வாதம் அமைதிக்கும், மாநில அரசின் அதிகாரத்ததிற்கும் எதிரானதாகும்.
முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து டாம் 999 திரைப்படம்
எடுக்கவில்லையென்று அதனை இயக்கிய சோகன் ராய் என்ற மலையாளி கூறினாலும்,
அது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் பெரும் அழிவை
ஏற்படுத்தும் என்பதை சித்தரிக்கவே எடுக்கப்பட்டது என்பதையும், அதனால்தான்
படத்தின் பெயரில் 999 என்ற எண் சேர்க்கப்பட்டதற்குக் காரணமாகும்
என்பதையும் அனைவரும் அறிவர். அது முல்லைப் பெரியாறு அணை கட்ட போடப்பட்ட
999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை நினைவூட்டவே என்பதையும் எவராலும் மறுக்க
முடியாது. இல்லையென்றால் இந்தப் படத்திற்கு கேரள அரசு நிதியுதவி செய்தது
ஏன்?
இப்படி உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னரும், அதற்கு மத்திய அரசின்
தணிக்கைக் குழு இந்தியா முழுவதும் திரையிட சான்றிதழ் அளித்தது. ஆனால்,
அந்தப் படத்தை திரையிட்டால் அது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப்
பாதிக்கும் என்பதாலேயே தமிழக அரசு அதன் வெளியீட்டிற்குத் தடை விதித்த்து.
இதனை எதிர்த்து சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நேர்
நின்ற மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மோகன் ஜெயின், ஒரு
படத்திற்கு மத்திய அரசு தணிக்கை சான்றிதழ் அளித்தப் பிறகு அதனை திரும்பப்
பெற முடியாது என்றும், அவ்வாறு மத்திய அரசால் சான்றிதழ் அளிக்கப்பட்டத்
திரைப்படத்தை வெளியிட மாநில அரசு தடை விதிக்க அதிகாரமில்லை என்றும்
கூறியுள்ளார்.
டாம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் அது பொது அமைதிக்கு பங்கம்
விளைவிக்கும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது என்பதை
விளக்கிய பிறகும் இவ்வாறு மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார்
என்றால், தமிழ்நாட்டில் பொது அமைதி கெட வேண்டும் என்று மத்திய அரசு
விரும்புகிறதா, தமிழர்களும் மலையாளிகளும் அடித்துக் கொண்டு சாக வேண்டும்
என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கேட்கிறோம்.
சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட விடயமாகும்.
அது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியானது. டாம் 999 திரைப்படத்தின்
நோக்கம் என்வென்பதை அதன் இயக்குனர் சோகன் ராயை அழைத்துப் பேசி உறுதி
செய்துகொண்ட பின்னர்தான் தமிழக அரசு 6 மாத காலத்திற்கு தடையை விதித்தது.
ஆனால், அது குறித்து தமிழக அரசுடன் கலந்து பேசி, இரு மாநில மக்களுக்கு
இடையே பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் வாக்குமூலம் தாக்கல் செய்யாமல்,
பிரச்சனையை உண்டாக்கும் நோக்குடன் மத்திய அரசு வழக்குரைஞர்
வாதிட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
டாம் 999 திரைப்படம் தயாரிக்கப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்னணியில்
உள்ள கேரள அரசின் சதித் திட்டத்தையும் சரியாகப் புரியவைக்க மத்திய அரசு
தவறும் காரணத்தினால், அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு
தமிழக அரசு விதித்துள்ள தடையை உச்ச நீதிமன்றம் நீக்குமானால், அதனால்
ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

உலகத்தமிழர்களின் உரிமைக்காக நாம்தமிழர் இயக்கம் போராடும்-சீமான்

உலகத்தமிழர்களின் உரிமைக்காக நாம்தமிழர் இயக்கம் போராடும்-சீமான்

இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்காவிட்டால் GOOGLE, FACEBOOK இணையதளங்களை தடை செய்ய நேரிடும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 13-01-2012 அன்று வெளியிட்டது

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் நீதிபதி SURESH CAIT இவ்வாறு தெரிவித்துள்ளார். GOOGLE நிறுவனத்தின் விநியோக உரிமை மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும், இணையதளங்களில் பதிவேற்றப்படும் தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றிற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் GOOGLE INDIA நிறுவனம் எடுத்துரைத்த வாதங்களை நீதிபதி நிராகரித்து விட்டார். மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் சீனாவைப் போல் இந்தியாவிலும் கடும் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்படும் என்று நீதிபதி கூறினார். இணையதளங்களில் உள்ள தகவல்களை தணிக்கை செய்யும் பொறுப்பை இணைய சேவை வழங்கும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கூகுள் நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.

பொங்கலோ பொங்கல்

 பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து சொல்வது நம் உள்ளூர் தொலைக் காட்சி அல்ல . ஒரு வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் தமிழ் சேனல். இவர்கள் ஆங்கில புத்தாண்டுக்கு கூட தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லாமல் தமிழர்களின் திருநாளாம் தை புத்தாண்டு பொங்கலுக்காக நம் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல கடந்த இரு வாரங்களாக இந்த வாழ்த்து செய்தியை ஒளிபரப்பி கொண்டிருக்கின்றனர். இவர்களை பார்த்து நமது உள்ளூர் தொலைக் காட்சிகள் திருந்து வார்களா ? டிஸ்கவரிதொலைகாட்சிக்கு நம் பொங்கல் வாழ்த்துக்கள்.

Thursday, January 12, 2012

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை அனங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள்,விலங்குகளை வதைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், திருச்சி, மதுரை ஆட்சியர்கள் வரும் பொங்கல் உழவர் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்திருந்தனர்.
இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரிய உதவி செயலாளர் வினோத்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், சிவகங்கையைச் சேர்ந்த அம்பலத்தரசு என்பவர் ஜல்லிக்கட்டு என்பது தமிழர் வீர விளையாட்டு என்பதாக, ஜல்லிக்கட்டுக்கு நடுவண் அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு குறித்த இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று இன்றும் நடைபெற்றது.இதனை விசாரித்த நீதிபதிகள் அலங்காநல்லூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி அளித்துள்ளனர். மேலும் 15, 16, 17- ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
                                          நன்றி
                   தமிழன் தொலைக்காட்சி

Wednesday, January 11, 2012

தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா-கலை நிகழ்ச்சி-கபடிப்போட்டி-செந்தமிழன் சீமான் உரை

                                      தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா
                                            தை முதல் நாள்.... தமிழர் திருநாள்

காலச்சுவடு பத்திரிக்கையைப் தமிழர்கள் புறக்கணிப்போம்!!


• காலச்சுவடு தலித்களுக்கு எதிராக வன்மத்துடன் நடந்து கொள்கிறது
• காலச்சுவடு இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது
• காலச்சுவடு இடதுசாரி இயக்கங்கள் மீது வன்மம் காட்டுகிறது
• காலச்சுவடு தேசிய இனப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறது
• காலச்சுவடு இந்திய அரசு எடுபிடிகளீன் கருத்துக்களை வெளீயிடுகிறது
• காலச்சுவடு பெரியார் போன்ற முற்போக்கு சக்திகளை கொச்சைப்படுத்துகிறது
• காலச்சுவடு தமிழீழ விடுதலைப் போராளிகளை கொச்சைப் படுத்துகிறது
• காலச்சுவடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அறத்தை மறுக்கிறது
• காலச்சுவடு பார்ப்பனிய கலாச்சாரத்தை தூக்கிப்பிடிக்கிறது
                                                                            நாம் தமிழர்

விடுதலைப் புலிகளின் அஞ்சல் தலைகளை புறக்கணிக்க இலங்கை முடிவு

விடுதலைப் புலிகளின் அஞ்சல் தலைகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட அஞ்சல் தலைகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

பன்னாட்டு; அஞ்சல் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு அஞ்சல் தலையும் உறுப்பு நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது பன்னாட்டு நாடுகளின் அஞ்சல் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இது தொடர்பான பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
.

வைகோ நன்றி தெரிவித்துள்ளார்

தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் வளத்திற்காக பென்னிகுவிக் 1895-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையை கட்டினார். இதனால் தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் லோயர்கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக்கின் பேரன் அழைக்கப்படுவார் என்றும் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Tuesday, January 10, 2012

ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை

ராமசுவரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் தங்கை
கணவரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க.,வினர் அவரை அடித்து
உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபக்சவின் தங்கை கணவர் நடேசன்
குமரனை தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம்
வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி ம.தி.மு.க, வை
சேர்ந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர்.
அதோடு ராமேஸ்வரம் கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நடேசனை முற்றுகையிட்ட அவர்கள்; நடேசனை அடித்து உதைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து நடேசனை மீட்டு அழைத்து சென்றனர்.
மேலும் நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
                                                                                                     நன்றி
                                                                                    தமிழன் தொலைக்காட்சி

Monday, January 9, 2012

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! நாமல்லாது வேறு யார் மாற்று? இதுவே நற்றமிழ் இனத்தார் கூற்று! 2016-ல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு.....நாம் தமிழராய்!

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

நாமல்லாது வேறு யார் மாற்று?
இதுவே நற்றமிழ் இனத்தார் கூற்று!
2016-ல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு.....நாம் தமிழராய்!

இலங்கை கடற்படையின் அட்டூளியத்தின் தொடர்கதை....அப்பாவி தமிழ்மீனவர்கள் கைது.

இலங்கை கடற்படையின் அட்டூளியத்தின் தொடர்கதை....அப்பாவி தமிழ்மீனவர்கள் கைது.

Sunday, January 8, 2012

தமிழீழத்தில் இலங்கை இனவெறி ராணுவத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி 2008டில் ராமேஸ்வரத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் ஆற்றிய நெருப்பு உரை. உலகத் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய செந்தமிழன் சீமானின் மிகச்சிறந்த பேச்சு இது.

தமிழீழத்தில் இலங்கை இனவெறி ராணுவத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி 2008டில் ராமேஸ்வரத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் ஆற்றிய நெருப்பு உரை.
உலகத் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய செந்தமிழன் சீமானின் மிகச்சிறந்த பேச்சு இது.

18MAY2010தில் மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்புரை.

18MAY2010தில் மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்புரை.

Wednesday, January 4, 2012

தேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – படங்கள் மற்றும் தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!


பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.