Friday, October 19, 2012
Saturday, March 10, 2012
இலங்கைப் போர்க்குற்றத்துக்கு எதிரான பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்புக் காட்டுவது வியப்பாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
ரங்கராஜனின் கருத்துக்கள் அனைத்தும் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமின்றி, மார்க்சியக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் இருப்பது வேதனையானது. தமிழின எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிக்கும் சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தமிழின விரோதக் கட்சி என்பதையும், அது உண்மையான மார்க்சியக் கட்சி அல்ல என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
எனவே இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைப்போல் மார்க்சிஸ்ட் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Friday, February 3, 2012
கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை பிரித்தாள நடுவணரசு முயல்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியை, கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டைப் பனகல் மாளிகை முன்பு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அணுஉலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களைச் சாதி மதங்களின் பெயரால் பிரித்துவிட நடுவணரசு முயல்வதாக குற்றம் சாட்டிய சீமான். அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்கம், காஞ்சிபுரம் மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புககளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Wednesday, February 1, 2012
போராட்டக்குழு மீது தாக்குதல்
கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, அணு உலையை இயங்கச் செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது
Sunday, January 29, 2012
இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி காணொளி இணைப்பு
சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த ,லங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கறுப்புக் கொடி காட்டினர்.
அவர்களை தடுத்த காவல்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். ,தனால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் ராஜபக்சேவின் மைத்துனருக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தநிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது

பாரதிராஜாவும் அப்துல்கலாமும் பச்சை துரோகிகள்-மு.களஞ்சியம்

Saturday, January 28, 2012
Subscribe to:
Posts (Atom)