Wednesday, January 11, 2012

வைகோ நன்றி தெரிவித்துள்ளார்

தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் வளத்திற்காக பென்னிகுவிக் 1895-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையை கட்டினார். இதனால் தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் லோயர்கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக்கின் பேரன் அழைக்கப்படுவார் என்றும் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment