Sunday, January 22, 2012

இலங்கை- இந்தியா கூட்டிணைந்து தமிழர்களை ஏமாற்ற முயற்சி - சீமாண் கண்டனம்




இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து, தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உறுதியளித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியிருப்பது ஈழத்தமிழர்களை ஏமாற்றும் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர்களுக்காண இன படுகொலை போரை நடத்தி ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசின் அதிபர் இராஜபக்சேவிடமே தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்துவதும், அதற்கு செவி சாய்ப்பது போல் இராஜபக்சேவும், இலங்கை அரசமைப்பு சட்டத்தில் 13-வது சட்டத்திருத்தத்திற்குச் சென்று தீர்வு அளிக்கப்போவதாக கூறுவதும், உலக நாடுகளை ஏமாற்ற இந்திய-இலங்கை அரசு இணைந்து அரங்கேற்றி வரும் கபட நாடகம் என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இனப்படுகொலை தொடர்பாக இராஜபக்சேவையும், இலங்கை அரசையும், பன்னாட்டு மனித உரிமை நீதிமன்றத்தில் நிறுத்த, பன்னாட்டு விசாரணை குழு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வரும் நிலையில் இரண்டு நாடுகளும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்  என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் இந்திய அரசை நம்பி தமிழர்கள் ஏமார்ந்துவிடக்கூடாது என்று சீமான் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment