Friday, January 13, 2012
இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்காவிட்டால் GOOGLE, FACEBOOK இணையதளங்களை தடை செய்ய நேரிடும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 13-01-2012 அன்று வெளியிட்டது
இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் நீதிபதி SURESH CAIT இவ்வாறு தெரிவித்துள்ளார். GOOGLE நிறுவனத்தின் விநியோக உரிமை மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும், இணையதளங்களில் பதிவேற்றப்படும் தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றிற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் GOOGLE INDIA நிறுவனம் எடுத்துரைத்த வாதங்களை நீதிபதி நிராகரித்து விட்டார். மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் சீனாவைப் போல் இந்தியாவிலும் கடும் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்படும் என்று நீதிபதி கூறினார். இணையதளங்களில் உள்ள தகவல்களை தணிக்கை செய்யும் பொறுப்பை இணைய சேவை வழங்கும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கூகுள் நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment