ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள்,விலங்குகளை வதைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், திருச்சி, மதுரை ஆட்சியர்கள் வரும் பொங்கல் உழவர் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்திருந்தனர்.
இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரிய உதவி செயலாளர் வினோத்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், சிவகங்கையைச் சேர்ந்த அம்பலத்தரசு என்பவர் ஜல்லிக்கட்டு என்பது தமிழர் வீர விளையாட்டு என்பதாக, ஜல்லிக்கட்டுக்கு நடுவண் அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு குறித்த இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று இன்றும் நடைபெற்றது.இதனை விசாரித்த நீதிபதிகள் அலங்காநல்லூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி அளித்துள்ளனர். மேலும் 15, 16, 17- ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நன்றி
தமிழன் தொலைக்காட்சி
No comments:
Post a Comment